Thursday, April 24, 2025

உயிர்த்தஞாயிறு தாக்குதல் (2019)- வெளிவந்த-வராத உண்மைகள் - பகுதி-2

🕰️ 2019 உயிர்த்தஞாயிறு  தாக்குதல் தொடர்பான முக்கிய நிகழ்வுகள் வரிசை - Timeline

படம்: LankaWeb 

📌 2018 நவம்பர் 28

🔸 வவுனதீவு காவல் துறையினர் இருவர் கொலை 

ஆரம்பத்தில் இந்தக் கொலைக்கு முன்னாள் விடுதலை *லி உறுப்பினர்கள் குற்றம்சாட்டப்பட்டனர். உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பு விசாரணைகளில் தேசிய தவ்ஹீத் ஜமாஅத் (NTJ) உறுப்பினர்கள், குறிப்பாக சஹ்ரான் ஹாஷிம், இந்தக் கொலைக்குப் பொறுப்பாளி என்று கண்டுபிடிக்கப்பட்டது.

📌 2018 டிசம்பர் – 2019 ஏப்ரல்

🔸 வெடிகுண்டுப் பொருட்கள் வாங்கல்

சஹ்ரான் தலைமையிலான NTJ குழுவினர் 1,900 டெட்டனேட்டர்கள் மற்றும் 1,300 வாட்டர் ஜெல் வெடிமருந்துகளை ஒரு உள்ளூர் வர்த்தகர் மூலம் வாங்கி பல பாதுகாப்பு இல்லங்களில் சேமிக்கப்பட்டு தாக்குதலுக்காக தயார் செய்யப்பட்டது.

📌 2019 மார்ச்

🔸 இந்திய ரோவிலிருந்து பல்வேறு எச்சரிக்கைகள் இலங்கை புலனாய்வுத்துறைக்கு அனுப்பப்பட்டது

இந்திய புலனாய்வு அமைப்பு (RAW) இலங்கைக்கு தாக்குதல் திட்டம், தாக்குபொருட்கள் மற்றும் இலக்குகள் தொடர்பான தகவல்களை அனுப்பியது.

ஆனால் இலங்கை அரசு மற்றும் புலனாய்வுத் துறைகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

📌 2019 ஏப்ரல் 16–19

🔸 இறுதி திட்டமிடல் கூட்டங்கள்

தற்கொலைப்படை உறுப்பினர்கள் இறுதி கூட்டங்களை நடத்தினர். தாகுதல் இலக்குகள் தேர்வு செய்யப்பட்டு வெடிகுண்டுகள் பகிர்வு மேற்கொள்ளப்பட்டது.

📌 2019 ஏப்ரல் 21 — உயிர்த்த ஞாயிறு (Easter Sunday)

🔴 ஒரே நேரத்தில் நடைபெற்ற தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் நிகழ்வுகள்:

காலை 8:45 – புனித அந்தோனியார் தேவாலயம், கொழும்பு.

8:47 – Kingsbury ஹோட்டல்.

8:47 – புனித செபாஸ்தியார் தேவாலயம்,  நீர்கொழ்ம்பு.

8:50 – Cinnamon Grand ஹோட்டல்.

8:54 – Shangri-La ஹோட்டல்.

9:05 – சியோன் தேவாலயம், மட்டக்களப்பு.

மாலை 1:20 – New Tropical Inn, தெஹிவளை (Taj Samudra-வில் வெடிக்க தவறிய குண்டு).

📍 உயிரிழந்தோர்: 270-க்கும் மேற்பட்டோர் (5 அமெரிக்கர்கள் உட்பட 50 வெளி நாட்டவர்), 1000-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

📌 2019 ஏப்ரல் 21 (மாலை)

🔸 தெமட்டகொட குண்டு வெடிப்பில் குடும்பத்துடன் பாத்திமா ஜிஃப்ரி தற்கொலை

போலீசார் வீட்டில் சோதனை நடத்தியபோது  இல்ஹாம் இப்ராஹிமின் மனைவி பாத்திமா ஜிஃப்ரி, தன்னையும் மூன்று பிள்ளைகளைகள் மற்றும் 3 STF அதிகாரிகளை கொன்றுகொண்டார். 

📌 2019 ஏப்ரல் 26

🔸 சாய்ந்தமருது பாதுகாப்பு இல்லத்தில் (safe house) தாக்குதல்

இராணுவம் சஹ்ரான் ஹாஷிமின் தந்தை மற்றும் இரு சகோதரர்கள் உட்பட பல NTJ உறுப்பினர்களை சுட்டுக் கொன்றது.

📌 2019–2021

🔸 கைது மற்றும் விசாரணைகள்

முக்கிய NTJ உறுப்பினர்கள் நவ்பார், மில்ஹான், ரிஸ்கான், மற்றும் வெடிகுண்டு வழங்கியவர் M.M.M.H.ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

ஜனாதிபதி விசாரணைக் குழு (PCoI) தாக்குதலுக்கு முன்னர் தகவல்களை புறக்கணித்தது குறித்து அதிகாரிகளை குற்றம் சாட்டியது.

📌 2023 செப்டம்பர்

🔸 Channel 4 ஆவணப்படம் – புலனாய்வுத் துறைகள் தொடர்பான குற்றச்சாட்டுகள்

முன்னாள் TMVP ஊடக செயலாளர் அசாத் மௌலானா NTJ மற்றும் இராணுவ புலனாய்வுத் துறை அதிகாரிகள் இடையிலான சந்திப்புகள் நடந்ததாகக் கூறினார்.

📌 2024–2025

🔸 தொடரும் விசாரணைகள் மற்றும் கைது நடவடிக்கைகள்

பிள்ளையான் மற்றும் அவரது முன்னாள் டிரைவர் ஹுஷைன் /குகன் உள்ளிட்டோர் மீது புதிய விசாரணைகள் மற்றும் கைது நடவடிக்கைகள் தொடர்கின்றன.

கிழக்குப்பல்கலைக்கழக உப வேந்தர் பேராசிரியர் ரவீந்திரநாத் TRO உறுப்பினர்கள்  காணாமல் போனது உள்ளிட்ட பழைய வழக்குகளும் மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளன.

பகுதி -3: உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கான காரணங்களாக சொல்லப்படுபவற்றின் தர்க்கரீதியான பகுப்பாய்வு. 

உயிர்த்தஞாயிறு தாக்குதல்- வெளிவந்த-வராத உண்மைகள் - பகுதி-1


சதிக்கோட்பாடுகளுக்கப்பால் 220 இலங்கையரையும் 50 வெளிநாட்டவரையும் பலிகொண்டதும் மேலும் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் காயத்துக்குள்ளாகவும் காரணமான உயிர்த்தஞாயிறு தாக்குதல் எப்படி நடைபெற்றது, யாரெல்லாம் பங்குபற்றினர் என்று ஆதாரபூர்மான ஆய்வு ஒன்றை செய்துகொண்டிருக்கின்றேன். அதன் முதற்பகுதி இது. இக்குண்டுத்தாக்குதலில் பங்கு பற்றிய முக்கியமானவர்களின் பெயர்கள் கீழே தந்துள்ளேன். இதில் மிக முக்கிய பங்குதாரர்களான நௌஃபர், மில்ஹான், ரிஸ்கான் ஆகியோர் தற்போது சிறையில் உள்ளனர். இவர்களின் பங்களிப்பை சுருக்கமாக இப்பதிவில் பார்ப்போம். 

1.சஹ்ரான் ஹாஷிம் -(சஹ்ரான்)- இலங்கையில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் தலைவன்.  ஷாங்கிரிலாவில் தற்கொலை குண்டுதாரியாகி உயிரழந்து விட்டார்.
2.முகமது நௌபர் (நௌஃபர்)- இரண்டாம் நிலை, ஊடகம் மற்றும் பயிற்சி ஒருங்கிணைப்பாளர், வெடிபொருள் பயிற்றுவிப்பாளர் - தற்போது சிறையில் உள்ளார். 
 3.அஹமட் மில்ஹான்(மில்ஹான்)- பயிற்சியாளர், இணை சதிகாரர், துப்பாக்கி மற்றும் வெடிமருந்து பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்- தற்போது சிறையில் உள்ளார்
4.மொஹமட் அன்வர் மொஹமட் ரிஸ்கான்(ரிஸ்கான்)- இரகசிய முகாம் வீடு வாங்கியவர், வெடிபொருட்கள் வாங்கியவரும் அவற்றை வினியோகித்தவரும்.- தற்போது சிறையில் உள்ளார் 
5அஹமட் முஅத் அலாவுதீன் (முஆத்)- புனித அந்தோணியார் ஆலயத்தில் தற்கொலை குண்டுதாரி.
6.முகமது ஆசாம் முகமது முபாரக் (முபாரக்)- கிங்ஸ்பரி ஹோட்டலில் தற்கொலை குண்டுதாரி
7.ஆச்சி முஹம்மது ஹஸ்துன் (ஹஸ்துன்)- நீர்கொழும்பு செயின்ட் செபாஸ்டியன் தேவாலயத்தின் தற்கொலை குண்டுதாரி, வெடிபொருள் நிபுணர். புலஸ்தினி/ சஹ்ராவின் கணவர்.
8.முகமது இப்ராஹிம் இன்ஷாப் அகமது (இன்ஷாஃப்)- சினமன் கிராண்ட் ஹோட்டலில் தற்கொலை குண்டுதாரி
9.இல்ஹாம் முகமது முகமது இப்ராஹிம் (இல்ஹாம்)-  ஷாங்க்ரி-லா ஹோட்டலில் தற்கொலை குண்டுதாரி, ISIS நிதியாளர். 
10.அப்துல் லத்தீப் ஜமீல் முகமது (லத்தீஃப்) - தாஜ் சமுத்ராவில் தோல்வியுற்ற குண்டிற்குரியவர்.  பின்னர் நியூ டிராபிகல் இன்னில் வெடிக்க வைத்ததில் இறந்தவர். 
11.முகமது நாசர் முகமது ஆசாத் (ஆசாத்)- மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் தற்கொலை குண்டுதாரி. 
12.பாத்திமா முகமது ஜிஃப்ரி(ஜிஃப்ரி)- இல்ஹாமின் மனைவி, தெமட்டகொடையில் IED ஐ வெடிக்கச் செய்து, தன்னையும், 3 குழந்தைகளையும் மற்றும் STF அதிகாரிகளையும் கொன்றவர்.
13.புலஸ்தினி ராஜேந்திரன்/ சாஹ்ரா - ஈஸ்டர் குண்டு வெடிப்பின் ஒரு வாரத்தின் பின்பாக சாய்ந்தமருது இரகசிய மறைவிட முற்றுகையின்போது கொல்லப்பட்டதாக நம்பப்படுகின்றது. அவர் உயிர்தப்பி இந்தியா சென்றுவிட்டதாக ஒரு வதந்தியும் உண்டு. 
14. எம்.எம்.எம்.எச்- சஹ்ரானுக்கு 1,900 டெட்டனேட்டர்கள் மற்றும் 1,300 வாட்டர் ஜெல் வெடிபொருட்கள் வழங்கிய ஒரு கொழும்பு வர்த்தகர். தற்போது சிறையில்/பிணையில்(?)
அடுத்த பகுதியில் உயிர்த்தஞாயிறு தாக்குதலின் தொடர் நிகழ்வுகளையும் வெளிவராத உண்மைகளையும்   பார்ப்போம்.  -Kumaravelu Ganesan

ஐ.நா ஆணையாளரின் விசேட ஊடகவியலாளர் சந்திப்பு! UN High Commissioner Press Conference Sri Lanka. - YouTube கூகிள் மொழிபெயர்ப்பு:  பத்திரிகையாளர...