சதிக்கோட்பாடுகளுக்கப்பால் 220 இலங்கையரையும் 50 வெளிநாட்டவரையும் பலிகொண்டதும் மேலும் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் காயத்துக்குள்ளாகவும் காரணமான உயிர்த்தஞாயிறு தாக்குதல் எப்படி நடைபெற்றது, யாரெல்லாம் பங்குபற்றினர் என்று ஆதாரபூர்மான ஆய்வு ஒன்றை செய்துகொண்டிருக்கின்றேன். அதன் முதற்பகுதி இது. இக்குண்டுத்தாக்குதலில் பங்கு பற்றிய முக்கியமானவர்களின் பெயர்கள் கீழே தந்துள்ளேன். இதில் மிக முக்கிய பங்குதாரர்களான நௌஃபர், மில்ஹான், ரிஸ்கான் ஆகியோர் தற்போது சிறையில் உள்ளனர். இவர்களின் பங்களிப்பை சுருக்கமாக இப்பதிவில் பார்ப்போம்.
1.சஹ்ரான் ஹாஷிம் -(சஹ்ரான்)- இலங்கையில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் தலைவன். ஷாங்கிரிலாவில் தற்கொலை குண்டுதாரியாகி உயிரழந்து விட்டார்.
2.முகமது நௌபர் (நௌஃபர்)- இரண்டாம் நிலை, ஊடகம் மற்றும் பயிற்சி ஒருங்கிணைப்பாளர், வெடிபொருள் பயிற்றுவிப்பாளர் - தற்போது சிறையில் உள்ளார்.
3.அஹமட் மில்ஹான்(மில்ஹான்)- பயிற்சியாளர், இணை சதிகாரர், துப்பாக்கி மற்றும் வெடிமருந்து பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்- தற்போது சிறையில் உள்ளார்
4.மொஹமட் அன்வர் மொஹமட் ரிஸ்கான்(ரிஸ்கான்)- இரகசிய முகாம் வீடு வாங்கியவர், வெடிபொருட்கள் வாங்கியவரும் அவற்றை வினியோகித்தவரும்.- தற்போது சிறையில் உள்ளார்
5அஹமட் முஅத் அலாவுதீன் (முஆத்)- புனித அந்தோணியார் ஆலயத்தில் தற்கொலை குண்டுதாரி.
6.முகமது ஆசாம் முகமது முபாரக் (முபாரக்)- கிங்ஸ்பரி ஹோட்டலில் தற்கொலை குண்டுதாரி
7.ஆச்சி முஹம்மது ஹஸ்துன் (ஹஸ்துன்)- நீர்கொழும்பு செயின்ட் செபாஸ்டியன் தேவாலயத்தின் தற்கொலை குண்டுதாரி, வெடிபொருள் நிபுணர். புலஸ்தினி/ சஹ்ராவின் கணவர்.
8.முகமது இப்ராஹிம் இன்ஷாப் அகமது (இன்ஷாஃப்)- சினமன் கிராண்ட் ஹோட்டலில் தற்கொலை குண்டுதாரி
9.இல்ஹாம் முகமது முகமது இப்ராஹிம் (இல்ஹாம்)- ஷாங்க்ரி-லா ஹோட்டலில் தற்கொலை குண்டுதாரி, ISIS நிதியாளர்.
10.அப்துல் லத்தீப் ஜமீல் முகமது (லத்தீஃப்) - தாஜ் சமுத்ராவில் தோல்வியுற்ற குண்டிற்குரியவர். பின்னர் நியூ டிராபிகல் இன்னில் வெடிக்க வைத்ததில் இறந்தவர்.
11.முகமது நாசர் முகமது ஆசாத் (ஆசாத்)- மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் தற்கொலை குண்டுதாரி.
12.பாத்திமா முகமது ஜிஃப்ரி(ஜிஃப்ரி)- இல்ஹாமின் மனைவி, தெமட்டகொடையில் IED ஐ வெடிக்கச் செய்து, தன்னையும், 3 குழந்தைகளையும் மற்றும் STF அதிகாரிகளையும் கொன்றவர்.
13.புலஸ்தினி ராஜேந்திரன்/ சாஹ்ரா - ஈஸ்டர் குண்டு வெடிப்பின் ஒரு வாரத்தின் பின்பாக சாய்ந்தமருது இரகசிய மறைவிட முற்றுகையின்போது கொல்லப்பட்டதாக நம்பப்படுகின்றது. அவர் உயிர்தப்பி இந்தியா சென்றுவிட்டதாக ஒரு வதந்தியும் உண்டு.
14. எம்.எம்.எம்.எச்- சஹ்ரானுக்கு 1,900 டெட்டனேட்டர்கள் மற்றும் 1,300 வாட்டர் ஜெல் வெடிபொருட்கள் வழங்கிய ஒரு கொழும்பு வர்த்தகர். தற்போது சிறையில்/பிணையில்(?)
அடுத்த பகுதியில் உயிர்த்தஞாயிறு தாக்குதலின் தொடர் நிகழ்வுகளையும் வெளிவராத உண்மைகளையும் பார்ப்போம். -Kumaravelu Ganesan

No comments:
Post a Comment