நாசா விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பேரி "புட்ச்" வில்மோர் ஆகியோர் சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) ஏற்பட்ட எதிர்பாராத விதமான காலதாமததத்திற்கு பின்பு நாளை பூமிக்குத் திரும்ப உள்ளனர். ஏற்கனவே புறப்பட்டு விட்டனர். ஆரம்பத்தில் ஒரு வாரத்திற்கு மட்டுமே திட்டமிடப்பட்ட பயணம் ஏறக்குறைய 9 மாதத்திற்கு பின்பாக முடிவுக்கு வருகின்றது.
சுனிதா வில்லியத்தையும் அவரது குழுவையும் முந்தைய முட்*ள் ஜனாதிபதி பைடன் அந்தரிக்க விட்டுவிட்டுவிட்டார், நான் தான் மீட்டுள்ளேன் என்று இந்நாள் ஜனாதிபதி ட்றம்ப் திருவாய் மலர்ந்தருளியுள்ளார். அவர் கூறியுள்ளது உண்மையா என்று பார்ப்போம்.
சர்வதேச விண்வெளி நிலையம் (ISS): ஒரு கூட்டு சுற்றுப்பாதை ஆய்வகம்
ISS என்பது அமெரிக்கா (NASA), ரஷ்யா (Roscosmos), ஜப்பான் (JAXA), ஐரோப்பா (ESA) மற்றும் கனடா (CSA) ஆகியவற்றின் விண்வெளி நிறுவனங்களை உள்ளடக்கிய ஒரு பன்னாட்டு கூட்டுத் திட்டமாகும். பூமிக்கு மேலே சுமார் 400 கிலோமீட்டர் தொலைவில் சுற்றும், ISS ஆனது ஒரு நுண்புவியீர்ப்பு மற்றும் விண்வெளி சுற்றுச்சூழல் ஆராய்ச்சி ஆய்வகமாக செயல்படுகிறது, அங்கு பூமியில் சாத்தியமில்லாத அறிவியல் ஆராய்ச்சிகள் நடத்தப்படுகிறன. 1998 இல் அதன் முதல் பாகம் தொடங்கப்பட்டதிலிருந்து, இந்த நிலையம் தொடர்ந்து இயங்கி வருவதுடன் அங்கு தொடர்ந்து ஆராச்சியாளர்கள் இருந்து வருகின்றனர். இது விண்வெளி ஆய்வில் சர்வதேச ஒத்துழைப்பைக் குறிக்கிறதுபுக்கு அடையாளமாக இருந்து வருகின்றது.
ஒரு ஒப்பீட்டுக்கு- யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கான தரைவழிப் பயணத்தின் தூரமும் 400 km தான். ஆனால் சந்திரனுக்கு பூமியில் இருந்து பயணம் செய்ய வேண்டிய தூரம் இதைப்போல் ஆயிரம் மடங்கு (384,400 km) என்பதை கவனிக்கவும்.
தாமதத்திற்கான காரணங்கள்:
சுனிதா குழுவின் Crew-9 திரும்பி வர ஏற்பட்ட காரணம் நாசா என்னும் அமெரிக்க வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகத்தின் செயற்பாடுகள் தனியார்மயமாக்கப்பட்டதும் அவற்றை போயிங் மற்றும் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்-X நிறுவனத்திடமும் ஒப்படைக்கப்பட்டதில் இருந்தும் ஆரம்பிக்கின்றது. நாசாவின் சலஞ்சர்(1986) கொலம்பியா (2003) விண்ணூர்திகளின் வெடிப்பும் 14 விண்வெளி வீரர்களின் உயிரிழப்பும் இந்த தனியார் மயமாக்கலிற்கான காரணமாக சொல்லப்படுகின்றது.
சுனிதா மற்றும் வில்மோர் ஆகியோர் ஜூன் 5, 2024 அன்று போயிங் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட ஸ்டார்லைனர் விண்கலத்தில் பரீட்சார்த்த பறப்புக்கு (Crew Flight Test) பணியின் ஒரு பகுதியாக ISS க்கு அனுப்பப்பட்டனர். ஒரு வாரம் மட்டுமே நீடிக்கும் நோக்கம் கொண்ட இந்த பணி, ISS க்கு வந்தவுடன் குறிப்பிடத்தக்க தொழில்நுட்ப சிக்கல்களை எதிர்கொண்டது. குறிப்பாக, விண்கலத்தின் உந்துவிசை அமைப்பில் உள்ள சிக்கல்கள் மற்றும் ஹீலியம் கசிவுகள் உள்ளிட்டவை அடையாளம் காணப்பட்டன, இது ஒரு குழுவினர் திரும்பும் பயணத்திற்கான விண்வெளிக்கப்பலின் தயார்நிலை குறித்த கவலைகளை எழுப்பியதால் விரிவான பகுப்பாய்விற்குப் பிறகு, விண்வெளி வீரர்களை ஸ்டார்லைனரில் மீண்டும் கொண்டு வருவது மிகவும் ஆபத்தானது என்று நாசா கருதியது. பாதுகாப்பான திரும்பும் முறையை ஏற்பாடு செய்யும் வரை ISS இல் அவர்கள் தங்குவதை நீட்டிக்க முடிவு செய்தது.
உண்மையில் சுனிதா வில்லியம்ஸ் குழுவினர் அந்தரிக்க விடப்பட்டனரா?
கடந்த செப்டம்பர் மாதத்திலேயே ரஸ்யாவின் Soyuz MS-26 விண்ணூர்தியும், அமெரிக்காவின் SpaceX Crew-9 Dragon Capsule உம் அங்கு போய்ச் சேர்ந்து ISS கராச்சில் பார்க் பண்ணியுள்ளன. விரும்பினால் அவசரத்திற்கு அவற்றில் திரும்பியிருக்கலாம். ஆனால் ஒவ்வொரு விண்ணூர்தியும் அவற்றிற்கான விண்வெளி வீரர்களின் எண்ணிக்கைக்கும் தேவைக்குமாக வடிவமைக்கப்பட்டிருந்ததால் அவற்றை அவர்கள் குழப்ப விரும்பவில்லை. அது தான் உண்மை.
ஸ்பேஸ்-X - போயிங் நிறுவனக்களுக்கிடையிலான போட்டி, அதன் பின்னாலுள்ள அரசியல், ISS இல் என்ன ஆராய்ச்சிகள் செய்கின்றார்கள், அவை உண்மையில் அவசியமா என்பவை பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம்.
No comments:
Post a Comment