தையிட்டி விகாரை விவகாரத்தை சில விட்டுக்கொடுப்புக்களுடன் எப்படி சமாதானமாக தீர்க்கலாம் என்று நான் சிந்தித்ததன் விளைவாக இந்த கட்டுரை பிறந்துள்ளது. கிட்டத்தட்ட 2 தலைமுறையினரின் காணிப்பிரச்சனையை மூன்றாம் தலைமுறைக்கு கடத்தாமல் தீர்க்கும் ஒரு உபாயமாக சில முன்மொழிவுகளை நான் முன்வைத்துள்ளேன்.
தேவனம்பியதீசனால் கட்டப்பட்டதாக கருதப்படும் திஸ்ஸ விகாரை என்னும் பெயருடைய ஒரு பெளத்த விகாரை காங்கேசந்துறைக்கு அருஆமையில் அமைந்துள்ள தை≠≠≠யிட்டி பகுதியிலேயே அமைந்திருக்க வேண்டும் என்று நம்பிய சில பெளத்த பிக்குகள் 1946 ஆம் ஆண்டு உலுத்தன் வளவு என்னும் 20 பரப்புக் காணியில் (படம்-1:சிவப்பு) ஒரு பன்சல அமைத்து வழிபாடுகள் செய்ய ஆரம்பித்தனர். இந்த செய்மதிப்படத்தில் காட்டப்பட்டுள்ள வரைபுகள் ஓரளவு அளவிடைக்கமைய வரையப்பட்டுள்ளது.
1958 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ் சிங்கள இனக்கலவரத்தின் பின்பாக இப்பகுதியில் வாழ்ந்த சிங்கள குடிகளின் வெளியேற்றத்துடன் இந்த பன்சாலையும் அழிந்து போய் விட்டது. யுத்தம் முடிவடைந்த பின்பாக இப்பிரதேசம் இராணுவக்கட்டுப்பாட்டுக்குள் இருந்த காலத்தில் இராணுவத்தின் உதவியோடு இந்தக்கோவில் பிரமாண்டமாக பழைய காணிக்கருகில் உள்ள நிலங்களை கையகப்படுத்தி கட்டப்பட்டுவிட்டது. 7 ஏக்கர் நிலத்தில் வேலியமைத்து (படம்-1: ஊதா) போதிமரம், தாதுகோபம், பெளத்தகுருவுக்கான தங்குமடம் என்பன அமைக்கப்பட்டுள்ளன.
ஆனால், முன்பு பன்சல இருந்ததாக கருதப்படும் காணி இப்பொழுதும் இவ்வேலிக்கு வெளியே தனியாக காடு வளர்ந்து இருக்கின்றது.
படம்1: தையிட்டி திஸ்ஸ ரஜமகா விகாரை அமைந்துள்ள பகுதியின் செய்மதிப்படம் (2024).
1. சிவப்பு: 1946 இல் பன்சல அமைக்கப்பட்ட 1.24 ஏக்கர் காணி.
2. ஊதா: தற்போதைய விகாரை அமைந்துள்ள 7 ஏக்கர் நிலத்தின் வேலி.
3. மஞ்சள் : பெளத்த மகாசஙம் உரிமை கோரும் 16 ஏக்கர் நிலம்.
4. நீலம்: அரச மரம், தாதுகோபம் ஆகியவற்றை உள்ளடக்கிய 1.5 ஏக்கர் காணி.
கடந்த பல வருடங்களாக ஏறக்குறைய 20 குடும்பங்கள் தமது நிலம் தமக்கு வேண்டும் என்று தமது காணிப் பத்திரங்களுடன் போராடி வருகின்றனர்.
இந்த நிலையில், இலங்கை பெளத்த மகாசங்கம் தமக்கு 16 ஏக்கர் காணி (படம்-1: மஞ்சள்) சொந்தமானது என்றும் அவற்றை பெற்றுத்தருமாறும் கேட்டு யாழ் மாவட்ட செயலகத்திற்கு கடிதம் எழுதியுள்ளது.
தற்போது இனவாதிகள் இதை பேசுபொருளாக்கி அரசியல் செய்ய முயன்று வருவதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. சில விட்டுக்கொடுப்புக்களுடன் இப்பிரச்சனையை சமாதானமாகத் தீர்த்துக்கொண்டால் எல்லோருக்கும் நன்மை பயக்கும். தீர்வுக்கான எனது முன்மொழிவாக பின்வருவனவற்றை பரிந்துரைக்கின்றேன்.
பரிந்துரைகள்
- போதிமரம், தாதுகோபம் ஆகியவற்றை உள்ளடக்கிய 1.5 ஏக்கர் காணி (படம்-1: நீலம்) முறைப்படி விகாரைக்கு அளிக்கப்படலாம்.
- இவ்விகாரையின் முகப்பு கலைவாணி வீதிக்கு மாற்றப்படலாம்.
- விகாரை முறைப்படி பெளத்த விவகார அமைச்சில் பதிவு செய்யப்பட்டு உரிமம் மாற்றப்பட வேண்டும்.
- ஏற்கனவே பன்சல இருந்த 1.25 ஏக்கர் காணி (படம்-1: சிவப்பு) இத்துடன் இணைக்கப்பட்டு மேலதிக கட்டடங்கள் அமைக்கப்படலாம்.
- இந்த 1.5 எக்கர் காணி உரிமையாளர்களுக்கு வேறு காணி அல்லது அதற்கீடான நட்ட ஈடு வழங்கப்படலாம். அல்லது அருகில் உள்ள மற்றைய காணிகளில் இருந்து வழங்கப்படலாம்.
Tissa Viharai – A Proposal for Settlement
- 1.5 acres of land (Figure 1: Blue), including the Bo tree and the stupa, should be formally granted to the Vihara.
- The front entrance of the Vihara should be relocated to Kalaivani Street.
- The Vihara should be formally registered with the Ministry of Buddhist Affairs, and its custody should be transferred.
- 1.25 acres of land (Figure 1: Red), where the original Pansala once stood, should be attached to the Vihara, allowing for the construction of additional buildings.
- The owners of the 1.5-acre plot (Figure 1: Blue) should be provided with alternative land or equivalent compensation, potentially from nearby available lands.
No comments:
Post a Comment