Friday, June 23, 2023

 டைட்டான் நீர்மூழ்கி விபத்து- என்ன நடந்தது?

டைட்டானிக் என்ற பெயர் டைட்டான்ஸ் என்ற கிரேக்க கடவுள்களில் இருந்து வந்தது. அத்திலாந்திக் கடலில் கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டுகளுக்கு முன்பாக மூழ்கி 3800 மீட்டர் ஆழ்த்தில் கிடக்கும் டைட்டானிக்கின் எச்சங்களை  சுற்றுலாப்பயணம் செய்து பார்ப்பதற்காக உருவாக்கப்பட்டது இந்த  டைட்டான் என்னும் நீர்மூழ்கிக் குடுவை (submersible) ஆகும். இது ஒரு சிறிய மினிவானின் அளவானது. இப்படியான நீர்மூழ்கிக்குடௌவகள் பல பாவனையில் இருந்தாலும், அவை பெரும்பாலும் உருக்கு, அலுமினியம், டைட்டீனியம் போன்ற உலோகங்களாலேயே செய்யப்படும். அண்மைக்கலமாக கார்பன் பைபர் கொம்பொசிட் என்னும் மிகவும் பாரம் குறைந்த பைபர் கிளாஸ் போன்ற ஒரு மூலப்பொருளால் செய்ய ஆரம்பித்தனர். இந்த கார்பன் பைபர் தான் டைட்டானுக்கு எமனாகியிருக்கின்றது என்று நிபுணர்கள் கருதுகின்றன்ர். உடைந்த பாகங்களை வெளியில் எடுக்கும்போது இது உறுதிசெய்யப்படும், 

காபன் பைபரின் (carbon fibre)- நன்மையும் தீமையும்

இவை உலோகங்களை விட 70% பாரம் குறைந்தவையாகவும் உறுதியானவையாகவும் உள்ளதால்  காபன் பைபரை தற்போது கார்களின் பொடி, பொனட் போன்ற பகுதிகளிலும், விமானங்களில் வெளிப்பகுதி, டென்னிஸ் றக்கெட், பட்மிண்டன் றக்கெட், கொக்கி ஸ்டிக் போன்ற விளையாட்டுப்பொருட்கள், காற்றாலையின் விசிறிகள், நீரின் கீழ் சுழியோடுபவர்களுக்கான ஒக்சிஜன் சிலிண்டர்களை செய்யவும் தற்போது  பெருமளவில் உபயோகிக்கின்றனர். 

இப்படியான கார்பன் பைபரினால் செய்யும் ஒக்சிஜன் சிலிண்டர் போன்றவை 5 வருடத்திற்கொரு முறை ஹைறோ டெஸ்ட் என்னும் அமுக்கச் சோதனை செய்து சான்றிதல் பெற வேண்டும் என்ற விதிமுறை பல நாடுகளில் உள்ளது. சிலிண்டரில் மனிதக் கண்களுக்கு தெரியாமல் ஏற்படும் சிறிய சேதம் கூட பேரழிவு விபத்தை (catastrophic failure) தோற்றுவிக்கும்.

கார்பன் பைபரை டைட்டான் போன்ற நீர்மூழ்கி குடுவைகளில் பாவிப்பது ஆபத்தானது என்று முன்பே பல நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். கார்பன் பைபர் சுவர்களில் ஏற்படும் சிறிய சேதம் ஒரு உள்நோக்கிய வெடிப்பை (implosion) ஏற்படுத்தி பேரழிவு விபத்தை தோற்றுவிக்கும் என்று கூறியிருந்தனர். 

ஆனால் இந்த OceanGate நிறுவனம் எந்தவொரு நாட்டின் சட்டதிட்டங்களிலும் அடங்காது சர்வதேச கடற்பரப்பில் தனது உல்லாசப்பயண தொழிலை செய்துகொண்டிருந்ததால் அவர்களுக்கு சாதாரணமான பாதுகாப்பு சான்றிதழ்கள் பெறவேண்டிய தேவை இருக்கவில்லை. இவர்களுக்கு காப்புறுதி கூட இருந்திருக்காது! 


படம்: ஹைறோ டெஸ்ட் என்றழைக்கப்படும் சோதனையில் பேரழிவு வெடிப்பை சந்தித்த ஒரு ஒக்சிஜன் சிலிண்டரின் படம்.


No comments:

Post a Comment

கலாநிதி நாகலிங்கம் எதிர்வீரசிங்கம்: விளையாட்டு, கல்வி, மனிதாபிமானத்தின் சிகரம்

கலாநிதி  நாகலிங்கம் எதிர்வீரசிங்கம்: விளையாட்டு, கல்வி, மனிதாபிமானத்தின் சிகரம் கலாநிதி குமாரவேலு கணேசன் (STEM-Kalvi) ஏப்ரல் 18, 2024 அன்று,...