Tuesday, March 18, 2025

சுனிதா ரிட்டேர்ண்ஸ்


நாசா விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பேரி "புட்ச்" வில்மோர் ஆகியோர் சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) ஏற்பட்ட எதிர்பாராத விதமான காலதாமததத்திற்கு பின்பு நாளை பூமிக்குத் திரும்ப உள்ளனர். ஏற்கனவே புறப்பட்டு விட்டனர். ஆரம்பத்தில் ஒரு வாரத்திற்கு மட்டுமே திட்டமிடப்பட்ட பயணம் ஏறக்குறைய 9 மாதத்திற்கு பின்பாக முடிவுக்கு வருகின்றது. 

சுனிதா வில்லியத்தையும் அவரது குழுவையும் முந்தைய முட்*ள் ஜனாதிபதி பைடன் அந்தரிக்க விட்டுவிட்டுவிட்டார், நான் தான் மீட்டுள்ளேன் என்று இந்நாள் ஜனாதிபதி ட்றம்ப் திருவாய் மலர்ந்தருளியுள்ளார். அவர் கூறியுள்ளது உண்மையா என்று பார்ப்போம். 



சர்வதேச விண்வெளி நிலையம் (ISS): ஒரு கூட்டு சுற்றுப்பாதை ஆய்வகம்

ISS என்பது அமெரிக்கா (NASA), ரஷ்யா (Roscosmos), ஜப்பான் (JAXA), ஐரோப்பா (ESA) மற்றும் கனடா (CSA) ஆகியவற்றின் விண்வெளி நிறுவனங்களை உள்ளடக்கிய ஒரு பன்னாட்டு கூட்டுத் திட்டமாகும். பூமிக்கு மேலே சுமார் 400 கிலோமீட்டர் தொலைவில் சுற்றும், ISS ஆனது ஒரு நுண்புவியீர்ப்பு மற்றும் விண்வெளி சுற்றுச்சூழல் ஆராய்ச்சி ஆய்வகமாக செயல்படுகிறது, அங்கு பூமியில் சாத்தியமில்லாத அறிவியல் ஆராய்ச்சிகள் நடத்தப்படுகிறன. 1998 இல் அதன் முதல் பாகம் தொடங்கப்பட்டதிலிருந்து, இந்த நிலையம் தொடர்ந்து இயங்கி வருவதுடன் அங்கு தொடர்ந்து ஆராச்சியாளர்கள் இருந்து வருகின்றனர்.   இது விண்வெளி ஆய்வில் சர்வதேச ஒத்துழைப்பைக் குறிக்கிறதுபுக்கு அடையாளமாக இருந்து வருகின்றது.

ஒரு ஒப்பீட்டுக்கு- யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கான தரைவழிப் பயணத்தின்  தூரமும் 400 km தான். ஆனால் சந்திரனுக்கு பூமியில் இருந்து பயணம் செய்ய வேண்டிய தூரம் இதைப்போல் ஆயிரம் மடங்கு (384,400 km) என்பதை கவனிக்கவும். 

தாமதத்திற்கான காரணங்கள்: 

சுனிதா குழுவின் Crew-9 திரும்பி வர ஏற்பட்ட காரணம் நாசா என்னும் அமெரிக்க வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகத்தின் செயற்பாடுகள் தனியார்மயமாக்கப்பட்டதும் அவற்றை போயிங் மற்றும் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்-X நிறுவனத்திடமும் ஒப்படைக்கப்பட்டதில் இருந்தும் ஆரம்பிக்கின்றது. நாசாவின் சலஞ்சர்(1986) கொலம்பியா (2003) விண்ணூர்திகளின் வெடிப்பும் 14 விண்வெளி வீரர்களின் உயிரிழப்பும் இந்த தனியார் மயமாக்கலிற்கான காரணமாக சொல்லப்படுகின்றது. 

சுனிதா மற்றும் வில்மோர் ஆகியோர் ஜூன் 5, 2024 அன்று போயிங் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட  ஸ்டார்லைனர் விண்கலத்தில் பரீட்சார்த்த பறப்புக்கு (Crew Flight Test) பணியின் ஒரு பகுதியாக ISS க்கு அனுப்பப்பட்டனர். ஒரு வாரம்  மட்டுமே நீடிக்கும் நோக்கம் கொண்ட இந்த பணி, ISS க்கு வந்தவுடன் குறிப்பிடத்தக்க தொழில்நுட்ப சிக்கல்களை எதிர்கொண்டது. குறிப்பாக, விண்கலத்தின் உந்துவிசை அமைப்பில் உள்ள சிக்கல்கள்  மற்றும் ஹீலியம் கசிவுகள் உள்ளிட்டவை அடையாளம் காணப்பட்டன, இது ஒரு குழுவினர் திரும்பும் பயணத்திற்கான விண்வெளிக்கப்பலின்  தயார்நிலை குறித்த கவலைகளை எழுப்பியதால்  விரிவான பகுப்பாய்விற்குப் பிறகு, விண்வெளி வீரர்களை ஸ்டார்லைனரில் மீண்டும் கொண்டு வருவது மிகவும் ஆபத்தானது என்று நாசா கருதியது.   பாதுகாப்பான திரும்பும் முறையை ஏற்பாடு செய்யும் வரை ISS இல் அவர்கள் தங்குவதை நீட்டிக்க முடிவு செய்தது.

உண்மையில் சுனிதா வில்லியம்ஸ் குழுவினர் அந்தரிக்க விடப்பட்டனரா?



கடந்த செப்டம்பர் மாதத்திலேயே ரஸ்யாவின் Soyuz MS-26 விண்ணூர்தியும், அமெரிக்காவின் SpaceX Crew-9 Dragon Capsule உம் அங்கு போய்ச் சேர்ந்து ISS கராச்சில் பார்க் பண்ணியுள்ளன. விரும்பினால் அவசரத்திற்கு அவற்றில் திரும்பியிருக்கலாம். ஆனால் ஒவ்வொரு விண்ணூர்தியும் அவற்றிற்கான விண்வெளி வீரர்களின் எண்ணிக்கைக்கும் தேவைக்குமாக வடிவமைக்கப்பட்டிருந்ததால் அவற்றை அவர்கள் குழப்ப விரும்பவில்லை. அது தான் உண்மை.

ஸ்பேஸ்-X - போயிங் நிறுவனக்களுக்கிடையிலான போட்டி, அதன் பின்னாலுள்ள அரசியல், ISS இல் என்ன ஆராய்ச்சிகள் செய்கின்றார்கள், அவை உண்மையில் அவசியமா என்பவை பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம். 

Saturday, March 1, 2025

மலரும் புலத்து நினைவுகள் -10-

அழகி, ஆட்டொகிராப், தவமாய் தவமிருந்து, பின்பு வந்த 96 போன்ற திரைப்படங்கள் எமது பாடசாலை, பல்கலைக்கழக நினைவுகளை மீண்டும் அசைபோட தூண்டுபவை. அண்மையில் வெளியான டிராகன் திரைப்படம் எனது பல்கலைக்கழக நினைவுகளை மீண்டும் திரும்பிப்பார்க்க வைத்தது. 

எமது பல்கலைக்கழக காலம் என்பது 35 விடுதலை இயக்கங்கள் உருவாகி பின்பு அவையெல்லாம் அழிக்கப்பட்டு ஒரு பெரிய இயக்கமாக உருவான 1985-89 காலப்பகுதியாகும். இக்காலப்பகுதியில் தான் வடமாட்சி ஒப்பரேசன், இந்திய இராணுவம் அமைதிகாக்கும் பணிக்கு வந்தது, வடக்கு-கிழக்கு இணைந்த மாகாணசபை, 13 ம் திருத்தச்சட்டம் நிறைவேற்றப்பட்டது போன்ற மறக்கமுடியா அரசியல் சம்பவங்கள்  நடந்தன. சிறைக்கைதிகள் விடுதலை, பாலஸ்தீன ஆதரவு போன்றவற்றிகும் அடிக்கடி பல்கலைக்கழகத்தில் போராட்டங்கள் நடந்துகொண்டிருத்ததை எனது முன்னைய அத்தியாயங்களில் கூறியிருந்தேன். 



பிரச்சனைகள் ஆரம்பித்த காலம் என்பதால் எம்மில் பெரும்பாலானோருக்கு எமது பல்கலைக் கல்வி 3-4 வருடங்கள் நீடிக்கும் என்ற நம்பிக்கை அறவே இருக்கவில்லை. மின்சாரம், பெற்றோல், டீசல் என்பவை உட்பட பெரும் பொருளாதார தடைக்கு வடமாகாணம் உட்பட்டிருந்தது. எம்மில் பல மாணவர்கள் பல்கலைக்கழக முதலாம் வருடத்தில் சித்தியடையவில்லை. மேலும் பலர் பல பாடங்களில் அரியர்ஸ் வைத்துக்கொண்டிருந்தனர். எனது இரண்டாவது தடவை தோற்றிய A/L பரீட்சை முடிபின்படி பேராதனை பல்கலைக்கழகத்திற்கு பொறியியல் கற்கைக்கு தெரிவு செய்யப்பட்டிருந்ததால் நானும் பெரிதாக படிக்காமல் மட்டுமட்டாகவே சித்தியடைந்திருந்தேன். இரண்டாம் வருடம் முடியும் காலத்தில் பலருக்கு 10 பாடங்கள் கூட அரியர்ஸ் இருந்தன. அவர்களில் பலர் இன்று அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் மிக உயர்ந்த பதவிகளில் உள்ளனர் என்பது வேறு விடயம். நாட்டில் காணப்பட்ட அசாதாரண நிலைமையால் அவர்களுக்கு அந்த நேரம் கற்கும் மன நிலை இருக்கவில்லை என்பதே அவர்களின் இந்த நிலைக்கு காரணமாக இருந்தது. அக்காலப்பகுதியில் தான் ஆண்டிறுதி பரீட்சை என்பது செமெஸ்டர் முறைக்கு மாற்றப்பட்டது. 6 மாதத்தில் கொஞ்ச பாடங்களையும் மிகுதியை ஆண்டிறுதியிலும் எழுதுவது சுலபமாயினும் வருச முடிவில் மாத்திரம்  நோட்சை தூசு தட்டுவோருக்கு இது ஒத்துவராது.  எமக்கு அடுத்த வருடத்தில் கற்றவர்கள் செமெஸ்டர் பரீட்சைகளை ஆண்டிறுதிக்கு பின்போட போராடும்போது அவர்களுக்கெதிராக அரியர்ஸ் பாசக்கார நண்பர்களுக்காக  நாம் போராடி பெரும் அடிதடி சண்டை எல்லாம் வந்தது. 

பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சிலரின் கற்பித்தல் போர் அடிச்சாலும் சிலரின் கற்பித்தல் ஆர்வமாக கற்கத் தூண்டும். முக்கியமாக,  இளமையான, அழகான விரிவுரையாளர்களின் பாடங்கள் வகுப்பை கலகலப்பாக்கி எம்மை நிமிர்ந்து உட்கார வைக்கும். டிராகன் திரைப்படத்தில் வருவது போல ரொக்கெட் எல்லாம் விட்டு நேரே விரிவுரையாளரின் தலைமுடியில் லாண்ட் ஆன சம்பவம் எல்லாம் உணமையில் நடந்தது. 



பல்கலைக்கழகங்களைப் பொறுத்தவரையில் மிகவும் பசுமையாக காட்சி தருவது நுண்கலை, கலைப்பீடங்கள் தான். பொறியியல், பெளதிக விஞ்ஞானம் போன்ற கற்கை  நெறிகள் வரண்டு பாலைவனமாக காட்சி தரும். பாலைவனப் பசுஞ்சோலைகளை தேடி நீண்ட தூரம் பயணிக்க வேண்டியிருக்கும். 

எனது வகுப்பில் ஆகக்குறைந்த வயதில் கல்வி கற்ற ஒரு சிலரில் நானும் ஒருவன். எனது “தம்பி” மூஞ்சியை மறைக்க தாடி, மீசை எல்லாம் வைத்து கொஞ்சம் டெரராக என்னை மாற்றி வைத்திருப்பேன். ஒரு சண்டியன் போன்ற ஒரு தோற்றம் கெத்து என்று நினைக்கும் வயது அது. 

பின்பு இந்திய இராணுவம் வந்தபோது கிளீன் சேவ் எடுத்துக்கொண்டு திரிஞ்சது வேற கதை. 


ஐ.நா ஆணையாளரின் விசேட ஊடகவியலாளர் சந்திப்பு! UN High Commissioner Press Conference Sri Lanka. - YouTube கூகிள் மொழிபெயர்ப்பு:  பத்திரிகையாளர...