Monday, June 12, 2023

மலரும் புலத்து நினைவுகள் -01

----------------------------------------------

கோவிட்-19 லொக்டவுனுக்க இருந்து என்ன செய்யிறது என்று யோசிச்சு, நானும் எனது இளமைக்கால நினைவுகளை எழுதலாம் என்று முடிவெடுத்திருக்கின்றேன். எனது புலத்திலான வாழ்க்கை மலையும் மலைசார்ந்த தென் மாகாண ஊரான ஹுலந்தாவ என்ற ஊரில் ஆரம்பித்து, 80களின் ஆரம்பத்தில் ஹார்ட்லி, யாழ்ப்பாணக்கல்லூரி ஆகியவற்றிலும் அதன் பின்பு யாழ் பல்கலைக்கழகத்திலும் அதன் பின்பு 10 வருடங்கள் வந்தாறுமூலை கிழக்குப்பல்கலைக்கழகத்திலும், பேராதனை பல்கலைக்கழகத்திலும் 2000 ஆண்டளவில் நாட்டை விட்டு வெளியேறும் வரை தொடர்ந்தது. எழுதுவதற்கு நிறைய இருந்தாலும் ஒரு போட்டோவை இன்று எனது நண்பர் Nagendram இன் facebook இல் பார்த்தவுடன் அதைப்பற்றி எழுதலாம் என்று நினைத்தேன். அடுத்த பதிவுகளில், வெலிக்கடை சிறைக்கைதிகள் போராட்டம், விஜிதரனை விடுவிப்பதற்காக நாம் செய்த போராட்டங்கள், பின்பு கிழக்கில் எமது வாழ்வுக்கான போராட்டங்கள் என்று தொடரும்.
இந்திய செஞ்சிலுவைச்சங்கமும் இலங்கை செஞ்சிலுவைச் சங்கமும் இணைந்து வடமாகாணத்தில் மக்களுக்கு நிவாரணம் வழங்கிய காலத்தில் கிட்டத்தட்ட ஒரு மாதம் எமது விரைவுரைகளுக்கு சமூகமளிக்காது அதில் ஈடுபட்டோம். இந்தப்படம் ஹோட்டல் அசோக்கின் முன்பாக இந்திய செஞ்சிலுவை சங்க அதிகாரி சைகால் (Saigal?) உடன் எடுத்த படம். அந்த அனுபவம் பற்றி அடுத்த பதிவில்----
04/03/2020




No comments:

Post a Comment

கலாநிதி நாகலிங்கம் எதிர்வீரசிங்கம்: விளையாட்டு, கல்வி, மனிதாபிமானத்தின் சிகரம்

கலாநிதி  நாகலிங்கம் எதிர்வீரசிங்கம்: விளையாட்டு, கல்வி, மனிதாபிமானத்தின் சிகரம் கலாநிதி குமாரவேலு கணேசன் (STEM-Kalvi) ஏப்ரல் 18, 2024 அன்று,...